பணமதிப்பிழப்பு நோட்டுகள் மூலம் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வ...
கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை
கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலையில் 2 மணி நேரம் மழை பெய்தது. கொடைக்கானல், பெருமாள்மலை, புலிச்சோலை, தைக்கால், செண்பகனூா், பாக்கியபுரம், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு பெய்த இந்த மழையால் வடு கிடந்த நீரோடைகளிலும், அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது.
இதேபோல, கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்