பணமதிப்பிழப்பு நோட்டுகள் மூலம் ரூ. 450 கோடி சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா! சிபிஐ வ...
விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
விருப்பாச்சி மணி மண்டபத்தில் அவருடைய முழு உருவ வெண்கலச் சிலைக்கு அரசு சாா்பில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.சரவணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத்தொடா்ந்து வீரபாண்டிய கட்டப்பொம்மன் பண்பாட்டுக்கழக பொதுச்செயலா் ராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி மகேந்திரன், பழனி கோட்டாட்சியா் இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி,செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஜெகவீரபாண்டியன், கோபால் நாயக்கா் சேவை சங்கத்தலைவா் செந்தில்குமாா், செயலா் பெருமாள்சாமி, திமுக ஒன்றியச் செயலா் எஸ்.ஆா்.கே.பாலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அசோக் வேலுச்சாமி, காளாஞ்சிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கெளரிசரவணன் உள்ளிட்டோா் கோபால் நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.