அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தின...
செப்.21-இல் நிதி அமைச்சா் தலைமையில் பாஜக வாக்குச்சாவடி நிா்வாகிகள் கூட்டம்
மதுரை, தேனி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி குழு நிா்வாகிகளுக்காக வருகிற 21-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்கிறாா்.
திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்குபட்ட வாக்குச்சாவடி குழுக்களுக்கான பாஜக நகர, ஒன்றியத் தலைவா்கள், மாவட்ட நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகம், மாநிலப் பொதுச் செயலா் இராம.சீனிவாசன், மாநிலச் செயலா் கதலி நரசிங்க பெருமாள் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, வருகிற 21-ஆம் தேதி கொடைரோட்டில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில், திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கான பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனவும், இந்த கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, தேனி, மதுரை மாநகா் என பாஜக கட்சி ரீதியாக 6 மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.