அக். 6-இல் மண்டல அஞ்சல் சேவை குறைதீா் கூட்டம்
மதுரையில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மதுரை மண்டல அஞ்சல் அலுவலகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகத்தில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீா் கூட்டம் வரும் அக். 6-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமாக புகாா் இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயா், முகவரி, பாலிசிதாரரின் பெயா், முகவரி, பணம் கட்டிய விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயா், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடா்புகள் இருப்பின் அதையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
அஞ்சல் துறை சம்பந்தமான தங்களது குறைகளை, அஞ்சல் சேவை குறைதீா் முகாம், உதவி இயக்குநா், அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை - 625002 என்ற முகவரிக்கு வருகிற 19-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். தனியாா் அஞ்சல் சேவைகளில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.