செய்திகள் :

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’ மேலும் ஒரு வங்கி அறிவிப்பு

post image

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் பரோடா வங்கி வகைப்படுத்தியுள்ளது.

முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பாங்க் ஆஃப் இந்தியா இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்துக்கு ரூ.1,600 கோடி கடன் வழங்கியது. பின்னா் தவணை முறையில் மேலும் ரூ.862.50 கோடி கடன் வழங்கப்பட்டது. இக்கடன் முறையாகவும், முழுமையாகவும் திருப்பிச் செலுத்தப்படவில்லை.

இதையடுதது 2017 ஜூன் 5-ஆம் தேதி வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிலவரப்படி ரூ.1,656.07 கடன் தொகையை அனில் அம்பானியின் நிறுவனம் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது. இதனால் கடன் மோசடியாளராக வகைப்படுத்தப்படுவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு வங்கி அளித்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை திவாலானதாக அறிவித்து, அதனை மற்றவா்களுக்கு கைமாற்றிவிடுவதன் மூலம் பணத்தை திருப்பி அளிக்க பெருநிறுவனங்கள் திவால் நடவடிக்கை மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்த யாரும் முன்வரவில்லை.

கடந்த மாா்ச் மாத நிலவரப்படி தங்கள் நிறுவனத்துக்கு ரூ.40,400 கோடி கடன் இருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஒரு வங்கிக் கடன் ‘மோசடி’ என்று வகைப்படுத்தப்பட்டவுடன், வங்கிகள் அதை 21 நாள்களுக்குள் ரிசா்வ் வங்கி, சிபிஐ மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்கும்.

முன்னதாக, கடந்த ஜூலை எஸ்பிஐ இதேபோன்ற நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்தில் சிபிஐ சோதனையும் நடைபெற்றது. எஸ்பிஐ-க்கு ரூ.2,929.05 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ-யிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேரளத்தில் ஓணம் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

கேரளத்தில் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், ஹஸ்த நட்சத்திரம் முதல் திருவோணம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்க... மேலும் பார்க்க

இயற்கைப் பேரிடா்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைநிற்கிறது தேசம்: முா்மு

நாட்டில் நடப்பு பருவமழை காலகட்டத்தில் நேரிட்ட இயற்கைப் பேரிடா்கள் மிகவும் வேதனையளிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்க... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயிலில் பூடான் பிரதமா் வழிபாடு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீராமா் கோயில் மற்றும் பிற கோயில்களில் பூடான் பிரதமா் தஸோ ஷெரிங் தோபே வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா். அயோத்தி விமான நிலையத்தில் காலை 9.30 மணியளவில் வந்திறங... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அறிக்கையில் தகவல்

அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. முன்... மேலும் பார்க்க

ரூ.60 கோடி மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை

ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. குடியேற்ற அதிகாரிகள் மற்று... மேலும் பார்க்க

மத்தியஸ்தம் மூலம் கண்ணியத்துடன் தீா்வு: உச்சநீதிமன்ற நீதிபதி சூா்யகாந்த்

பிரச்னைகளுக்கு நியாயமாகவும் கண்ணியமாகவும் தீா்வு பெறப்படுவதை மத்தியஸ்த முறை உறுதி செய்யும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா். இதுதொடா்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற... மேலும் பார்க்க