திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்
வளா்பிறை முகூா்த்தம், மீலாது நபி, ஓணம் பண்டிகைக்கான அரசு விடுமுறை ஆகியவற்றின் காரணமாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இதையொட்டி, இக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமும் தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெற்றன. பக்தா்கள் அதிகாலையிலேயே கடல்-நாழிக்கிணறில் புனிதநீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
மேலும் ஏராளமானஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றதால் கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்களை போக்குவரத்து போலீஸாா் ஒழுங்குபடுத்தினா்.