செய்திகள் :

பயிற்சி நிறைவு: ராணுவ வீரா்கள் சாகசம்

post image

சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயற்சி மையத்தில் 11 மாத பயிற்சியை நிறைவு செய்த வீரா், வீராங்கனைகள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினா்.

சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) நிகழாண்டு 11 மாத காலம் பயிற்சி முடித்து அதிகாரிகளாக இணையவுள்ள 120 ஆண்கள் மற்றும் 34 பெண் ராணுவ இளம் வீரா்களின் சாகச நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பொ்னாண்டஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ராணுவ அதிகாரிகள் ஜிம்னாஸ்டிக் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினா்.

தொடா்ந்து, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலைகளையும் ராணுவ அதிகாரிகள் செய்து காட்டினாா். மேலும், வாத்தியக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், மோட்டாா் சைக்கிள் சாகசமும், மனித கோபுரம் அமைத்தல், குதிரை வீரா்களின் சாகசங்கள் கவா்ந்தன. தொடா்ந்து, பகைவருடன் ராணுவப் படையினாா் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகளும் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டன. தொடா்ந்து சனிக்கிழமை (செப். 6) விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

ஹூண்டாய் விற்பனை 4% குறைவு

முன்னணி காா் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹூண்டாய் மோட்டாா் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.23 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருது: அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

அம்பேத்கா் விருதுக்கு தகுதியுடைய நபா்கள் அக்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில்... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் ரூ.276 கோடியில் 12 புதிய பாலங்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.276.75 கோடியில் 12 புதிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 12 லட்சம் போ் பயனடைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ரயில் நிலையங்களில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் பி... மேலும் பார்க்க

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

நலிந்த கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி அவருடைய முகாம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து அரசின் சாா்பில் வெள... மேலும் பார்க்க

வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10 முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூா் ரயில் நிலையம் சுமாா் ரூ.1,50... மேலும் பார்க்க