மும்பையில் விடைபெற்ற விநாயகர்: கனமழையில் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில...
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளார்: மருத்துவமனை அறிக்கை
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நலமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வர் சோர்வு மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவர் நலமாக உள்ளதாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. முதல்வர் பகவந்த் மானின் முக்கிய உடல் இயக்கங்கள் இயல்பாக இருப்பதாகவும், அவர் எழுந்து நடக்கத் தொடங்கியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !
முன்னதாக உடல்நலக் குறைவால் முதல்வர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே வியாழக்கிழமை பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் நேரில் பார்வையிட்டார்.
ஆனால் உடல்நிலை பிரச்னை காரணமாக முதல்வர் பகவந்த் மானால் அவருடன் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.