செய்திகள் :

AMMA: ``என் ராஜினாமாவுக்கு விமர்சனங்கள் காரணமல்ல'' - ஓராண்டுக்குப் பின் மௌனம் கலைத்த மோகன்லால்

post image

மலையாளத் திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, பிரபல இயக்குநர் சித்திக், நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட பலர் மீது நடிகைகள் போலீஸில் பாலியல் புகார் அளித்தனர்.

AMMA - மோகன்லால்
AMMA - மோகன்லால்

அந்த சமயத்தில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் (AMMA), தலைவர் பதவியிலிருந்த மோகன்லால் உட்பட நிர்வாக பதவியில் இருந்த அனைவரும் கூட்டாகப் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அப்போது, இவ்வளவு பாலியல் புகார்கள் வரும்போது அதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில இருக்கும் சங்கம் இப்படி பிரச்னையிலிருந்து விலகுவதா என விமர்சனங்கள் எழுந்தன.

அதற்கு, "மலையாள திரைத்துறையில் சுமார் 21 அமைப்புகள் இருக்கும்போது அவைகளிடம் கேள்வி கேட்காமல் `அம்மா' அமைப்பிடம் மட்டுமே கேள்வி எழுப்புவது சரியல்ல" என்று மோகன்லால் கூறியிருந்தார்.

இந்த நிலையில், பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மோகன்லால் மௌனம் கலைத்திருக்கிறார்.

மோகன்லால்
மோகன்லால்

ஏசியாநெட் நியூஸுக்கு அளித்த பேட்டியில் விளக்கிய மோகன்லால், "நான் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டேன். திடீரென்று பலருக்கு நாங்கள் எதிரிகளாகிவிட்டோம்.

இருப்பினும், நாங்கள் ராஜினாமா செய்ததற்கு விமர்சனங்கள் காரணமல்ல. முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் இது என்று உணர்ந்தபோது நான் ராஜினாமா செய்தேன்" என்று கூறினார்.

கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற AMMA சங்க தேர்தலில் தலைவர் பதவியில் வெற்றி பெற்ற நடிகை ஸ்வேதா மேனன், அம்மா அமைப்பின் 31 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Lokah: லோகா யூனிவர்ஸில் இணையும் `மலையாள சூப்பர் ஸ்டார்'; இயக்குநரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பல பெரிய பட்ஜெட் படங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில், நடுத்தர பட்ஜெட்டில் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ படமான 'லோகா சாப்டர் 1: சந்திரா' மலையாளத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் வெற்றி... மேலும் பார்க்க

Malavika Mohanan: ``முதல் வாய்ப்பு இப்படித்தான் கிடைத்து'' - மம்மூட்டிக்கு குறித்து மாளவிகா மோகனன்

ஹிருதயபூர்வம்சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப், சங்கீதா மாதவன் நாயர் மற்றும் சித்திக் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் ப... மேலும் பார்க்க

Lokah: "இது சிறிய பட்ஜெட் திரைப்படம் என நினைக்கிறார்கள்; ஆனால்...." - துல்கர் சல்மான்

கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் திரையரங்குகளில் அதிரடி வெற்றி பெற்றிருக்கிறது 'லோகா' திரைப்படம். இந்த மலையாள சினிமாவை இயக்குநர் டாமின் அருண் இயக்க, நடிகர் துல்கர் சல்மான் தயாரித்திருக்கிறார். L... மேலும் பார்க்க

Lokah: க்யூட்டான காதலி `டு' லேடி சூப்பர் ஹீரோ - யார் இந்த கல்யாணி பிரியதர்ஷன்?!

மலையாள திரைப்படங்கள் மொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்குவது இது முதன்முறை அல்ல. ஆனால் அந்த வரிசையில் தனித்த இடத்தைப் பிடிக்கிறது லோகா சாப்டர் 1: சந... மேலும் பார்க்க

Lokah: அக்ஷய் குமார் டு பிரியங்கா சோப்ரா - 'பெண் சூப்பர் ஹீரோ'வைப் புகழும் பாலிவுட் நட்சத்திரங்கள்!

மலையாள சினிமாவின் சூப்பர் ஹீரோ படமான லோகா சாப்டர் 1: சந்திரா திரையரங்குகளில் சாதனை படைத்துவருகிறது. பெண் மைய கதையான லோகாவில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருக்கிறார். நாடுமுழுவதுமிருந்து இவருக்கு பாராட்ட... மேலும் பார்க்க