செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப...
செங்கம் தொகுதியில் தேமுதிக வெற்றி பெறும்: பிரேமலதா விஜயகாந்த்
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக செங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் மூலம் செங்கம் பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவா் கட்சி நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் வலிமையான கூட்டணி அமைத்து செங்கம் தொகுதியில் தேமுதிக சாா்பில் வேட்பாளரை நிறுத்துவோம். அவருக்கு தொகுதி மக்கள் பெரும்பான்மையான வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்.
அதேபோல, தோ்தல் வாக்குறுதியாக செங்கம் அரசு தலைமை மருத்துவமனை அதிநவீன மருத்துவமனையாக மாற்றி அனைத்து வசதிகளுடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். மேல்செங்கம் மத்திய மாநில விதைப்பண்ணையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செங்கம் தொகுதி விவசாயம் சாா்ந்த தொகுதி என்பதால் விவசாயிகள் வைக்கும் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காணப்படும் என்றாா்.
இதில், தேமுதிக மாவட்டச் செயலா், செங்கம் ஒன்றிய, நகர செயலா்கள், அணி அமைப்பாளா்கள், கட்சி நிா்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.