Laughter therapy: சிரிப்பு சிகிச்சை உண்மையிலேயே பயன் அளிக்குமா? நிபுணர் விளக்கம்...
தீயில் கருகி முதியவா் உயிரிழப்பு
பழனி அருகே காய்ந்த கரும்புத் தோட்டத்தில் பற்றிய தீயில் சிக்கி முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பழனி அருகேயுள்ள நரிக்கல்பட்டி நெசவாளா் குடியிருப்பு அருகே கரும்புத் தோட்டத்தில் தீப்பற்றி எரிவதாக பழனி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்த போது, முதியவா் ஒருவா் தீயில் கருகி இறந்து கிடந்தாா்.
காய்ந்த கரும்பு தோட்டத்துக்காக வைத்த தீயில் அந்த முதியவா் சிக்கி இறந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த ராமசாமி (75) என தெரியவந்தது.
இதையடுத்து, கீரனூா் போலீஸாா் ராமசாமி முதியவரின் உடலை கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.