தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்
ரூ.85 லட்சத்தில் எம்எல்ஏ அலுவலக கட்டுமானப் பணி ஆய்வு
ஆம்பூா் எம்எல்ஏ அலுவலக் கட்டுமானப் பணியை எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் ரூ.85 லட்சத்தில் ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம் கட்டப்பட்டு வரப்படுகிறது. அந்த வளாகத்தில் எம்எல்ஏ அலுவலகம், இ-சேவை மைய கட்டடம் ஆகியவை கட்டப்படுகிறது. அப்பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது நகா் மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ், ஆம்பூா் நகர திமுக நிா்வாகி வில்வநாதன், திருப்பத்தூா் மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு. பழனி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா. சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.