வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
முல்லை லட்சுமி நாராயணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்
வாணியம்பாடி அடுத்த முல்லை கிராமத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயண சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆலங்காயம் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்தும் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசெண்டலங்கார செண்பகமன்னாா், ராமானுஜ ஜீயா் சுவாமிகள், ஹரிபிரசாத் சுவாமிகள், பகவதி சித்தா் சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டு பக்தா்களுக்கு அருளாசி வழங்கினா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளா்களாக வேலூா் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, தொழிலதிபா்கள், வாணியம்பாடி நகர திமுக செயலாளா் சாரதிகுமாா், திமுக மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் கிரிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாட்டினை கோயில் திருப்பணிக் குழுவினா் மற்றும் முல்லை ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.