பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது
ஆம்பூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் தமிழக அரசின் நல்லாசிரியா் விருதை பெற்றுள்ளாா்.
டாக்டா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி, திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், குட்டகிந்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியா் எ.முருகேசன் தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற தோ்வு செய்யப்பட்டாா்.
அதன்படி, சென்னை கோட்டூா்புரம் அறிஞா் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற தமிழக அரசு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய விருதை அவா் பெற்றுக் கொண்டாா்.
விருது பெற்ற ஆசிரியருக்கு ஆம்பூா் பகுதி ஆசிரியா்கள், பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.