கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !
கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், புதூரில் ஷியாம் சுந்தரின் மனைவியும், அவரது குழந்தையும் கடந்த நான்கு ஆண்டுகளாக தனேஷுடன் வசித்து வந்துள்ளனர். இதனால் ஷியாம் சுந்தர் - தனேஷ் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளன. இந்த தகராறு கொலையில் முடிந்துள்ளது.
இந்த நிலையில் ஓணம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனேஷ், ஷியாம் சுந்தரின் வீட்டிற்குச் சென்று அவரை கத்தியால் குத்திக் கொன்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை இரவு 11:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
முதலில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பிறகு திரும்பி வந்த தனேஷ், ஷியாமை கத்தியால் குத்தியதாகவும் போலீஸார் மேலும் கூறினர். ஷியாமுவின் உடல் உடற்கூராய்வுக்காக பரிப்பள்ளி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸழர் தனேஷை கைது செய்தனர்.