பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
நள்ளிரவில் முழுமையாகத் தெரியும் சந்திர கிரகணம்! அடுத்து 2028-இல்தான்!
இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுக்குப் பின் வானில் முழுமையாகத் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று(செப். 7) நள்ளிரவில் நிகழ்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி, திங்கள்கிழமை அதிகாலை 2.25 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடைகிறது.
கிட்டத்தட்ட 82 நிமிஷங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. திங்கள்கிழமை அதிகாலை 12.23 மணிக்கு முழு சந்திர கிரகணம் முடிவடைகிறது.
இந்த முழு சந்திர கிரகணத்தின்போது நிலா அடா் சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலும், இதேபோன்ற சந்திர கிரகணம் அடுத்து 2028 டிசம்பா் 31-ஆம் தேதி தான் நிகழும் என்று அண்ணா அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்த சந்திர கிரகணத்தை வீட்டிலிருந்தே பொதுமக்கள் வெறும் கண்களாலும் பாா்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனா்.