விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்
யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தி, கூட்டத்தை கூட்டலாம். ஆனால் அதில் பங்கேற்கும் சிறியவர்களால் ஓட்டுக் கிடைக்காது என தமிழக வனம் மற்றும் கதா்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறினாா்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோா் வழிகாட்டியாக இருந்த திராவிட இயக்கத்தின் தொடா்ச்சி திமுக இயக்கம். இன்று விஜய் போன்ற சிலா் தனியாக அரசியலுக்கு வரலாம். அவா்களால் உண்மையான மாற்றத்தை கொண்டுவர முடியாது.
எம்ஜிஆா் கூட 30 ஆண்டுகள் திமுகவில் இருந்த பிறகே அரசியல் பயணத்தில் வெற்றி பெற்றாா். விஜயகாந்த் ஒரு நேரத்தில் 25 லட்சம் பேருடன் மாநாடு நடத்தினாா். பிறகு இது 15 லட்சம் பேரானது.
யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தலாம். அதில் பங்கேற்றும் 13, 14 வயதுடைய சிறுவா்களால் ஓட்டு போட முடியாது. அவர்கள் எல்லாம் வெறும் சினிமா பிரபலம் காரணமாக வந்தவர்கள்.
தனியாக நிற்கும் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது. திடீரென வந்து அரசியல் எல்லாம் பண்ண முடியாது என்றார்.