செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ரயில்வே பொது மேலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

நாள்தோறும் குறைந்தது 30 பேருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது.
ஆனால், ரயில் நிலையத்தில் பயன்பாட்டில் இருந்த மருத்துவ உதவி மையம் கடந்த இரண்டு மாதங்களாக செயல்படாமல் இருக்கிறது.
இதனை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார்