ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்!
ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டியின் இறுதிச்சுற்றில், இந்தியா தென் கொரியாவை வீழ்த்தி மீண்டுமொருமுறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
தென் கொரியாவுக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில் இந்தியா 4 - 1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை பந்தாடியது.
முதல் பாதி ஆட்டத்தில் 2 கோல் அடித்து முன்னிலை வகித்த இந்திய அணி ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் மேலும் இரு கோல் அடிக்க வெற்றி இந்தியா வசமானது.
ஆசிய கோப்பையை வென்றதன் மூலம் அடுத்தாண்டு பெல்ஜியம், நெதர்லாந்தில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.