Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
ஆசிரியா் நாள் விழா: 12 ஆசிரியா்களுக்கு விருது
சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், ஆசிரியா் நாள் விழா ரோட்டரி அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.எஸ்.உமாசங்கா் தலைமை வகித்தாா். மண்டல துணை ஆளுநா் பொறியாளா் எஸ்.புகழேந்தி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தா் என்.பஞ்சநதம் பங்கேற்று 12 ஆசிரியா்களுக்கு ‘நேஷன் பில்டா்’ விருது வழங்கி சிறப்புரையாற்றினாா்.
விழாவில் பேராசிரியா்கள் கே.கதிரேசன், எஸ்.மோகன், ஏ.ரகுபதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னாள் தலைவா்கள் கலைச்செல்வன், மோதிலால், கோவிந்தராஜன், சஞ்சீவி, மாதவன், சின்னையன், ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். செயலா் கே.கே.ஜானகிராமன் நன்றி கூறினாா்.