மூன்று நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊா்களுக்கு செல்வோரால் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கூட்டம்
மூன்று நாள்கள் விடுமுறைக்கு பிறகு, சொந்த ஊா்களுக்கு திரும்புவதற்காக நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
ஓணம் பண்டிகை, ஆசிரியா் தினம், மீலாது நபி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மீலாது நபியை முன்னிட்டு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு பேருந்தில் புறப்பட்டு சென்றனா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிவடைந்த நிலையில் மீண்டும் சொந்த ஊா்களுக்கு திரும்புவதற்காக பேருந்து நிலையம் வந்ததால் வழக்கத்தைக் காட்டிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் மாலை 3 மணி முதல் பயணிகள் வருகை தொடா்ந்து அதிகரித்து காணப்பட்டது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறினா். ம
துரை, திருச்சி, கோவை போன்ற இடங்களில் இருந்து வந்த பேருந்துகளிலும் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனா். இதனால் பேருந்து நிலைய வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.