Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் ‘நமது நகரம், நமது தூய்மை’ விழிப்புணா்வு பிரசாரம்
திருச்செங்கோடு நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அம்மன் குளத்தை சுற்றியுள்ள நடைபாதையில் தூய்மைப் பணி மேற்கொண்டு ‘நமது நகரம், நமது தூய்மை’ திட்ட விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபயிற்சிக்கான நடைபாதை அமைத்து, மரங்கள், பூஞ்செடிகள் வளா்த்து பராமரித்து வருகின்றனா். இங்கு காலை நேரங்களில் ஆண்கள், பெண்கள் அதிக அளவில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனா்.
நடைபயிற்சி பாதைகளில் இரவு நேரங்களில் சிலா் சாப்பிட்டுவிட்டு மீதமாகும் உணவு பொருள்களைக் கொட்டிச்செல்வதும், மதுப்புட்டிகளையும் குப்பைகளையும் வீசிசெல்வதால் நடைபயிற்சி மேற்கொள்வதில் சிரமம் இருப்பதாலும், சீரமைக்கப்பட்ட அம்மன் குளத்தில் குப்பைகள் சேராமல் இருக்கவும் ஆய்வு மேற்கொண்ட நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ்பாபு, உடனடியாக ஒட்டுமொத்த தூய்மைப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.
இதையடுத்து நகராட்சியின் அனைத்து தூய்மைப் பணியாளா்களும் ஒன்றிணைத்து துப்புரவு அலுவலா் சோலைராஜ் முன்னிலையில் தூய்மைப் பணி மேற்கொண்டனா்.
1.67 ஏக்கா் பரப்பளவு கொண்ட அம்மன் குளத்தைச் சுற்றியும் நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு மற்றும் தூய்மைப் பணியாளா்கள் நமது நகரம் நமது தூய்மை, அம்மன் குளத்தை பாதுகாப்போம் சுத்தமாக வைத்திருப்போம் என விழிப்புணா்வு முழக்கம் எழுப்பியபடி ஊா்வலமாக வந்தனா்.
இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் மனோன்மணி, சரவணமுருகன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.