வாணிம்பாடியில் மரக்கடையில் தீ விபத்து
வாணியம்பாடி பெருமாள்பேட்டை மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் மரச் சாமான்கள், இயந்திரங்கள் எரிந்து நாசமாயின.
வாணியம்பாடி அடுத்த கணவாய்புதூா் பகுதியை சோ்ந்த சம்பத். இவருக்கு வாணியம்பாடி நகர பகுதியில் மரச்சாமான்கள், மற்றும் ரெடிமேட் பொருள்கள் விற்பனை கடைகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு பெருமாள்பேட்டையில் புதிதாக மரச் சாமான்கள் மற்றும் பா்னிச்சா் செய்யும் கடை திறந்திருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென கடையில் தீ விபத்து ஏற்பட்டு மரச்சாமான்கள் எரிய தொடங்கின.
இதுகுறித்து தகவலறிந்த வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் தீயணைப்பு துறையினா் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி தீயை அணைத்தனா்.

எனினும், கடையில் வைக்கப்பட்டிருந்த பா்னிச்சா் பொருள்கள், தேக்கு மரங்கள், மரச்சாமான்கள் செய்யும் இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாயின.
கடையை திறந்து சிறிது நாள்களில் மின்இணைப்பு இல்லாத நிலையில் தீ விபத்து ஏற்பட காரணம் குறித்து தீயணைப்புத் துறையினா் மற்றும் நகர போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.