10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள்?
மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்
மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5 விதி-19, பிரிவு- 12, விதி-35, பிரிவு-14, விதி-35 பிரிவு-15ன் படி துணைப் பொதுச்செயலர் உள்ளிட்ட கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போல், மல்லை சத்யா தனது துரோகம் செய்துவிட்டதாக வைகோ அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மல்லை சத்யா, தன்னை துரோகி எனக் கூறியதற்கு பதிலாக விஷம் கொடுத்திருந்தால் குடித்துவிட்டு இறந்திருப்பேன் எனத் தெரிவித்தார். இதனிடையே, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக மல்லை சத்யா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேலும், கட்சியின் துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாகவும், 15 நாள்களுக்குள் எழுத்துப்பூர்வமாக தன்னிடம் பதிலளிக்கவும் வைகோ தெரிவித்தார். இதையடுத்து அதற்கான விளக்கத்தையும் கடந்த வாரம் மல்லை சத்யா மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.