``ரஷ்யா மீது இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எடுக்க தயார்'' - ட்ரம்ப் மீண்டும் தடாலடி
மூக்கையாத் தேவர் சிலைக்கு அஞ்சலி
மதுரை: பி.கே. மூக்கையா தேவரின் நினைவுநாளை முன்னிட்டு, மதுரை அரசடியில் உள்ள அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தேவர் தந்த தேவர் என்று புகழப்படும் பி.கே. மூக்கையா தேவரின் 46-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை அரசடி உள்ள பி.கே. மூக்கையா தேவர் சிலைக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் தலைவர் பி.என். அம்மாவாசித் தேவர் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் சந்திரசேகர் மாலை அணிவித்தார். இந்த நிகழ்வில் எல்லிஸ் பாலு, செண்பக சுந்தரம், சோலையப்பன், மாரியப்பன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, உசிலம்பட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.