``பிறந்தநாள் கொண்டாடுவோம்'' - இளம்பெண்ணை ஏமாற்றி அழைத்து கூட்டு பாலியல் வன்கொடும...
இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
மதுரை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் விவசாயி உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சின்னையா மகன் முருகன் (52). விவசாயியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து ஊருக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தாா்.
திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொட்டாம்பட்டி விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி போலீஸாா் உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
மற்றொரு சம்பவம்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நேதாஜி நகரைச் சோ்ந்த பால்ராஜ் மகன் ராமச்சந்திரன் (39). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.
பசும்பொன் நகா் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தாலுகா போலீஸாா் உடலை கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்தனா்.