செய்திகள் :

தெருநாய் விவகாரம்: ``நாய்களுக்காக மனிதர்களை வெறுப்பது நல்ல மனோபாவம் அல்ல” - எஸ்.வி. சேகர்

post image

சமீபத்தில் தெருநாய் விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலைபாடு ஒன்றாகவே உள்ளது.

இதற்கிடையில், “தெருநாய்களுக்கும் நீதி வேண்டும்” என்ற முழக்கத்துடன் ஒரு குழு பேரணி நடத்தியது. அதன் பின்னர், தெருநாய்கள் தொடர்பான விவாதத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் முன்னெடுத்தது.

அதில் சின்னத்திரை நடிகை அம்மு, படவா கோபி உள்ளிட்ட சில திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். அந்த நிகழ்ச்சி சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாகியது.

DOG
தெருநாய்

இந்த நிலையில், சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய நிர்வாகிகளின் அறிமுக விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் எஸ்.வி சேகர், ``கடந்த 15 நாட்களாக சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக இருப்பது அம்மு தான் நாய்களுக்குள் நடக்கும் சண்டை போதாது என இப்போது நாய் வளர்ப்பவர்கள் எல்லாம் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.

நானே மூன்று நாய்களை வளர்க்கிறேன். தெருவில் வரும் நாய்களுக்கு என்னால் முடிந்த அளவில் வாசலில் உணவு வைப்பேன். அதற்காக நாய் கடித்ததற்கெல்லாம் நாம் பொறுப்பேற்க முடியுமா?

இரண்டும் உயிர்தான் என்றாலும், நம் வீட்டிலேயே ஒரு நாய் நம் குழந்தையை கடித்துவிட்டால், நாயையே வெளியே அனுப்புவோம்; குழந்தையை தூக்கி வெளியே போட மாட்டோம்.

எஸ்.வி சேகர்
எஸ்.வி சேகர்

இப்பொழுது டிவிகளில் டிஆர்பிக்காக வச்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் வீட்டில் பூனை, எலி, அணில் வளர்க்கிறார்கள். யாருக்கு என்ன பிடிக்கிறதோ, அதை அவர்கள் உரிய முறைப்படி வளர்த்துக் கொள்ளட்டும்.

அதற்காக எதையும் வளர்க்காதவர்களை “எனக்கு பிடிக்காது” எனச் சொல்வதும், மனிதர்களை வெறுப்பதும் நல்ல மனோபாவம் அல்ல. அன்பு செலுத்துங்கள்; பிரிவினை உண்டாக்கும் வார்த்தைகளை நாம் பயன்படுத்தக்கூடாது," என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Red Moon: `ரத்த நிலவு' இந்தியா உள்பட பல நாடுகளில் இன்று சந்திர கிரகணம்!

சந்திர கிரகணம்:இன்று இரவு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இந்த கிரகணத்தின் போது நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் இந்திய வான்... மேலும் பார்க்க

தெருநாய் விவகாரம்: ``இது அம்முவுக்காக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்'' - நடிகர் ராதாரவி

இந்தியாவில் தெருநாய்கள் அதிகரித்து வருவது, தெருநாய் கடி காரணமாக உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெருநாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்கள... மேலும் பார்க்க

Gaza: 23 நிமிடங்கள் கைதட்டல் வாங்கிய காசா படம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.தொடர்ந்த தாக்குதல்களால் காசா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

Dolce Vento: புறப்பட்ட சில நிமிடங்களில் மூழ்கிய சொகுசுக் கப்பல் - வைரலாகும் வீடியோ! - என்ன நடந்தது?

சொகுசு கப்பல்:துருக்கியில் ரூ.7 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சொகுசு கப்பல் கடலில் இறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. கடந்த 2-ம் தேதி துருக்கியின் ... மேலும் பார்க்க

துபாயில் ரூ.35 கோடி லாட்டரி வென்ற இந்திய தொழிலாளி - என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர், 1 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அபுதாபி பிக் டிக்கெட் சீரிஸ் 278 டிரா நடைபெற்றது. இதில் சந்தீப... மேலும் பார்க்க

Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்பு என்ன தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பது போல சிலருக்கு கார் கலெக்‌ஷன் பழக்கம் இருக்கும். இந்தியாவில் கார் கலெக்‌ஷன் செய்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை தவிர்க்கவே முடியா... மேலும் பார்க்க