தொடர் தோல்விகளால் திணறும் இங்கிலாந்து! 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக...
துபாயில் ரூ.35 கோடி லாட்டரி வென்ற இந்திய தொழிலாளி - என்ன செய்யப் போகிறார் தெரியுமா?
துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர், 1 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அபுதாபி பிக் டிக்கெட் சீரிஸ் 278 டிரா நடைபெற்றது. இதில் சந்தீப் குமார் என்ற 30 வயது இளைஞர், 35 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசை பெற்றுள்ளார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சந்தீப், கடந்த 3 ஆண்டுகளாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசித்து வருகிறார். துபாய் டிரைடாக்ஸ் என்ற நிறுவனத்தில் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.
கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்டிருந்த சந்தீப், ஆகஸ்ட் 19ம் தேதி 20 நபர்களுடன் சேர்ந்து லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அவருக்கு 200669 என்ற எண் கொண்ட லாட்டரி கிடைத்துள்ளது.
பிக் டிக்கெட் லாட்டரி நிறுவனம் அழைத்து வெற்றியை அறிவித்ததும், முதலில் நம்ப மறுத்தார் சந்தீப்.
இந்தப் பணம் தன்னுடைய குடும்பத்தைக் காக்க உதவும் என்றும், குறிப்பாக உடல் நலமில்லாத தந்தையின் மருத்துவச் செலவுக்கு பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா திரும்பியதும் சொந்த தொழிலில் ஈடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.
திருமணம் ஆன சந்தீப் குமாருக்கு, இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இந்த லாட்டரி, தனது குடும்பத்தை இன்னும் சிறப்பாக கவனிக்க நம்பிக்கையும் வலிமையும் அளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
`என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற மகிழ்ச்சியை அனுபவித்தது இல்லை' என்று கல்ஃப் நியூஸ் தளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.