45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!
``2026-ல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆனால்; ஓபிஎஸ், டிடிவி இருவரும்'' - அண்ணாமலை கணிப்பு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்காமல் அதிமுக-வை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்து தீவிரமாகத் தேர்தல் வியூகம் வகுத்து வருகிறார்.
புதிதாக விஜய் திமுக, அதிமுக, பாஜகவை எதிர்த்து தேர்தல் களத்தில் இறங்குகிறார்.

இதற்கிடையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகியது குறித்துப் பேசியிருக்கும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, "ஓபிஎஸ், டிடிவி இருவருமே பெருந்தன்மைமிக்க அரசியல்வாதிகள். அவர்களுடன் மிகவும் நெருக்கமாக நான் பேசியுள்ளேன். இருவருமே தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வர் என நம்புகிறேன்" என்று பேசியிருக்கிறார்.
விஜய் குறித்துப் பேசியிருக்கும் அண்ணாமலை, “2026-ல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். மாற்றத்துக்காக 10% வாக்காளர்கள் எப்போதுமே காத்திருப்பர். அவர்கள் விஜய்யை முன்னிறுத்துவர். ஆனால், யார் ஆட்சியமைப்பார்கள் என்பதே முக்கியம். நாங்கள் ஆட்சி அமைப்போம் என்பது எனது நம்பிக்கை” என்று தனது அரசியல் கணிப்பை கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs