45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!
வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: 11வது நாளாக நிறுத்தம்!
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை தொடர்ந்து 11வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பக்தர்கள் உயிரிழந்தனர். மற்றும் 20 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து யாத்திரை நிறுத்தப்பட்டது.
கடந்த பத்து நாள்களாக கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், தற்போது வானிலை சீரடைந்தாலும் யாத்திரையை மீண்டும் தொடங்குவது குறித்து அதிகாரிகள் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே தொடர்ந்து 11வது நாளா யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு நீண்ட நாள்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கத்ராவில் சேதமடைந்த யாத்திரை பாதை மற்றும் வணிக கட்டமைப்புகளில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளூர் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.