செய்திகள் :

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

post image

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக குறைக்கப்பட்டன. இதனால் 12% வரி விதிக்கப்பட்ட பல பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைந்தது; மேலும் பல பொருள்கள் 28%-இல் இருந்து 18% விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 5% வரி விதிப்பு இருந்த பல பொருள்கள் முழுமையாக ஜிஎஸ்டி விலக்குப் பெற்றன.

இந்நிலையில், புது தில்லியில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா் கோயல் இது தொடா்பாக கூறியதாவது:

ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீா்திருத்த நடவடிக்கையும் இதுவாகும். இதன் மூலம் கிடைக்கும் பலன்களை நுகா்வோருக்கு தொழில் நிறுவனங்கள் முழுமையாக அளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி குறைப்பு மூலம் பெரும்பாலும் அனைத்துப் பொருள்கள்-சேவைகளின் விலை குறையும். இதனால் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி அதிகரிப்பை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வளா்க்கும். தொழில் நிறுவனங்கள் இந்தியத் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு சிறப்பான மாற்றங்களைக் கண்டுள்ளது. இப்போது இரு வரி விகிதங்கள் மட்டுமே இருப்பது மறைமுக வரி விதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றமாகும். விவசாயம் தொடங்கி, சிறு, குறு தொழில்கள், மருந்து உற்பத்தி, மின்னணு சாதனங்கள், சுற்றுலா, காப்பீடு என அனைத்துத் துறைகளிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைவாா்கள்.

பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவா். சுதந்திர தின உரையின்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு சீா்திருத்தம் தொடா்பாக அவா் பேசினாா். இப்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பல பொருள்கள் ஜிஎஸ்டி-யில் இருந்து முழுமையாக விலக்குப் பெற்றுள்ளன. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கான பரிசு மக்களுக்கு கிடைத்துள்ளது. 140 கோடி மக்களின் சிறப்பான வாழ்க்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க

இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது. உயா... மேலும் பார்க்க

47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமா், முதல்வா்க... மேலும் பார்க்க

மணிப்பூா்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம் - பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்

மணிப்பூரில் வன்முறையைக் கைவிட்டு, அமைதித் தீா்வுக்குப் பணியாற்றவும், பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் ஒப்புக்கொண்டு, மத்திய-மணிப்பூா் அரசுகளுடன் இரு குகி-ஜோ பழங்குடியினக் குழுக்கள் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க