செய்திகள் :

``குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை'' - இளம்பெண் புகார்; டிவி நடிகர் கைது

post image

டெல்லியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்யும் 24 வயது பெண், பிரபல டிவி நடிகர் ஆசிஷ் கபூர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானார்.

ஆசிஷ் கபூர் தனது வீட்டில் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார். அந்த பார்ட்டிக்கு அந்த பெண்ணையும் அழைத்திருந்தார்.

பார்ட்டியில், தன்னுடைய குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து மயக்கம் அடையச் செய்ததும், தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அப்பெண் டெல்லி போலீஸில் புகார் அளித்திருந்தார்.

பார்ட்டியில் இருந்த மற்றொரு பெண் தன்னை தாக்கியதாகவும், நடந்த சம்பவத்தை வீடியோ எடுத்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொன்னால் அந்த வீடியோவை ஆன்லைனில் வெளியிடுவோம் என்று மிரட்டியதாகவும் அப்பெண் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, போலீஸார் இது தொடர்பாக கூட்டு பாலியல் வன்கொடுமை புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். திடீரென அப்பெண் தனது புகாரை மாற்றிக் கொண்டார்.

தன்னை டிவி நடிகர் ஆசிஷ் கபூர் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டார். அதனால் போலீஸார் அவரை மட்டும் தேடினர்.

ஆசிஷ் கபூர் தலைமறைவாக இருந்தார். அவரை தொடர்ந்து போலீஸார் கண்காணித்து வந்தனர். முதலில் ஆசிஷ் கபூர் கோவா சென்றார்.

அங்கிருந்து புனே சென்றார். உடனே போலீஸார் விரைந்து சென்று ஆசிஷ் கபூரை கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஆகஸ்ட் 11ம் தேதி போலீஸார் ஆசிஷ் கபூர், அவரது நண்பர், நண்பரின் மனைவி மற்றும் இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

18ம் தேதி அப்பெண் தனது வாக்குமூலத்தை மாற்றினார். அதில், ஆசிஷ் கபூரும் அவரது நண்பரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆசிஷ் கபூரின் நண்பரின் மனைவி தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில், ஆசிஷ் கபூரின் நண்பரும், அவரது மனைவியும் கோர்ட் மூலம் முன்ஜாமீன் பெற்றனர். முன்ஜாமீன் மனு விசாரணையின் போது, புகார் அளித்திருந்த பெண்ணும் ஆஜராகி இருந்தார். அவர் கோர்ட்டில் ஆசிஷ் கபூரின் நண்பரின் பெயரை சொல்லவில்லை.

பாலியல் வன்கொடுமை

பார்ட்டி நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோது ஆசிஷ் கபூரும் அப்பெண்ணும் பாத்ரூமுக்குச் செல்வது தெளிவாக பதிவாகியிருந்தது. அவர்கள் சிறிது நேரம் வெளியில் வரவில்லை.

இதனால், பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் நீண்ட நேரம் கதவைத் தட்டியது பதிவாகியுள்ளது. அவர்கள் வெளியில் வந்தபோது, ஆசிஷ் கபூரின் மனைவி அப்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`குட் டச், பேட் டச் சொல்லித் தருவதாக சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்' கராத்தே மாஸ்டர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயின் மிலாடு (46). கராத்தே மாஸ்டரான இவர் தனது வீட்டு தோட்டத்தில் உள்ள மைதானத்தில் கோஜு ரியூ ஒகினாவா என்ற பெயரில் கராத்தே அகடாமி நடத்தி வருகிறார். ... மேலும் பார்க்க