சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்க...
ரூ.50 கோடி வசூலைக் கடந்த ஹிருதயபூர்வம்!
மோகன்லாலின் ஹிருதயபூர்வம் திரைப்படம் ரூ.50 கோடி வசூலை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த ஆக.28ஆம் தேதி வெளியானது.
இதய மாற்று அறுவைச் சிகிச்சையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் நகைச்சுவை குடும்பத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
யு சான்றிதழ் பெற்ற இந்தப் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் பெற்றாலும் வசூலில் பெரிதாக வசூலிக்கவில்லை. மற்றுமொரு மலையாள திரைப்படம் லோகா ரூ.100 கோடியைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹிருதயபூர்வம் ரூ.50 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

நடிகர் மோகன்லாலின் கடைசி மூன்று படங்களும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றதால் ஹாட்ரிக் வெற்றி எனக் கூறப்படுகிறது.