செய்திகள் :

சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!

post image

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா... ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்திக்க தோன்றுமே. ஆம்,2008 -ல் அடிக்கல் நாட்டப்பட்டு 2009 -ல் இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட‌ சங்ககிரி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சங்ககிரி புதிய‌ பேருந்து நிலையம் பற்றித்தான் இந்த கட்டுரை உங்களுடன் உரையாட போகிறது.

சுமார் 15 ஆண்டுகளாக புதியதாகவே மக்கள் பயன்பாடு இல்லாமல் சங்ககிரி புதிய பேருந்து நிலையம் உள்ளது.

ஏன் இந்த நிலை? அடிப்படை வசதிகள் இல்லையா? அல்லது அதிகாரிகளின் பொறுப்பின்மையா? நேரில் கள ஆய்வு செய்தபோது குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் இருபாலருக்குமான கழிவறை வசதி கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கும் கழிவறை என சுத்தமான பேருந்து நிலையம் மட்டுமல்ல... மக்கள் கூட்டம் சுத்தமாக இல்லாத பேருந்து நிலையமும்கூட... ஏன்?

சுமார் 34 கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பெண்கள் காத்திருக்கும் அறை என மக்கள் பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட அறைகளுடன் கட்டப்பட்டுள்ளது இந்த பேருந்து நிலையம்.

மொத்தமுள்ள 34 கடைகளில் வெறுமனே 5 கடைகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ள நிலையில், அங்கு கடைகளை டெண்டர் எடுத்துள்ள கடைக்காரர்களைக் கேட்டபோது, ஆட்சியர், நகராட்சி ஆணையர் என அனைவரும் வந்து பார்த்தும் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட தீவிரமான‌ செயல்பாடுகள் இல்லை எனவும், தங்களிடம் `கோரிக்கை நிறைவேற்றி தருகிறோம்' என வெறும் பதில்கள் மட்டுமே அதிகாரிகள் மந்திரமாக உள்ளது என்றனர்.

இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாடு இல்லாத நிலையில், ``எங்களுடைய அடிப்படை வாழ்வாதாரம் இதை மட்டுமே நம்பி இருந்தால், அது கேள்விக்குறியாகும் அவலம் உள்ளது. மாதம் ₹5000 வாடகை மற்றும் மின் கட்டணம் தனியாக என வருமானம் காட்டிலும் செலவே அதிகமாக இருக்கிறது. மேலும் மூன்று ஆண்டு குத்தகைக்கு சுமார் 1 லட்சம் முன் பணமாக செலுத்தியுள்ளோம். இந்தப் பேருந்து நிலையத்தை யாராலும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாது... ஏனென்றால், மக்களின் தேவைகள் அனைத்தும் சுமார் 1 கி.மீ தொலைவிலுள்ள சங்ககிரி பழைய பேருந்து நிறுத்தத்திலுள்ளது. இந்தப் புதிய பேருந்து நிலையத்தின் சாலை பாதிப்பு காரணமாக இந்தப் பேருந்து நிலையததிற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் புதுப்பிப்பு அளிக்கவில்லை.

மேலும் இது அன்றைய ஆளும் கட்சியான 2008-2009 தி.மு.க அரசின் ஆட்சியில் கட்டியது. ஆட்சிப் பொறுப்பேற்று சுமார் 4 ஆண்டுகள் ஆனபோதும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாத சூழலில், இனி அது எப்படி சாத்தியமாகும்? அரசு நினைத்தால் முடியாதது இல்லை. ஆனால் அதை முழு முயற்சியுடன் செயல்படுத்த யாருமே தயாராக இல்லை என்பது நிதர்சனம்" எனக் குமுறினர்.

தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் கேட்டபோது, ``சங்ககிரி புதிய பேருந்து நிலையம் உள்ளே சென்று வரும் அளவுக்கு நேரம் எங்களுக்கு ஒதுக்கி தரப்பட வில்லை. மேலும் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது, பாதிப்படைந்த சாலை உள்ளிட்ட காரணங்கள் இருக்கின்றன" என்றனர் சுருக்கமாக.

பொது மக்களிடம் கேட்கும்போது, ``பேருந்துகள் உள்ளே செல்வதில்லை. இந்த இடத்தில் எங்களுக்கான தேவைகள் பெரிய அளவில் இல்லை, எனவே இந்த பேருந்து நிலையம் இவ்வளவு செலவோடு கட்டியது எங்களுக்கு எந்த பயனையும் தரவில்லை" என்று கூறுகின்றனர்.

இது குறித்து சங்ககிரி நகராட்சி ஆணையரிடம் பேசியபோது, ``சங்ககிரி நகராட்சியாக தரம் உயர்த்தி சுமார் 4 மாதங்களே ஆகின்றன. இந்தப் பிரச்னையை சரி செய்வது குறித்து சுமார் ₹50 லட்சம் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரித்திருக்கிறோம். கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்" எனக் கூறினார்.

15 ஆண்டுகளைக் கடந்து 16-வது ஆண்டை இந்தப் பேருந்து நிலையம் தொட்டிருக்கிறது. இப்போதாவது மக்கள் பயன்பாட்டுக்கு வருமா?!

பொறுத்திருந்து பாப்போம்!

``2026-ல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆனால்; ஓபிஎஸ், டிடிவி இருவரும்'' - அண்ணாமலை கணிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையன் சொல்வது நல்லதுதான்; அரசியலில் எதுவும் நடக்கலாம்'' - பாஜக நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையனின் வேண்டுகோள்; நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம்'' -ஓபிஎஸ் பதில்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

``அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம்'' -செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை அ.தி.மு.க-வில் சேர்க்க முடியாது என்று கறாராக ஓரம் கட்டிவிட்டு, பல்வேறு முரண்பாடுகளுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து 2026 தேர்தலை சந்திக்கலாம் என்று வியூகம் ... மேலும் பார்க்க

``பெரியாருக்கு என் கையால் சோறு பரிமாறியிருக்கிறேன்'' - லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.இந்தப் பயணத்தின் போது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தோட்ட தரணியின் கை ... மேலும் பார்க்க

ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள்... புதிய குழப்பங்களை உண்டாக்காமல் இருக்கட்டும்!

சமீபத்திய சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி பேசியபடியே, 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி வரி, வரும் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 5%, 18% என இரண்டு அடுக்குகளாக மாற்றப்ப... மேலும் பார்க்க