`நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' - பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமா...
Irfan Pathan - Dhoni: "நம் வீரர்கள் கேப்டன்களால் அழிக்கப்பட்டனர்; தோனி, கபில்தேவ்..." - யோகராஜ் சிங்
இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோ ஒன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு திடீரென வைரலானது.
தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் நன்றாக செயல்பட்டும் அணியில் இடமளிக்காதது குறித்து அந்த வீடியோவில், "எனக்கு ஒருவரின் அறையில் ஹூக்கா (புகைப்பிடிக்க பயன்படுத்த பைப் வடிவிலான ஒரு பொருள்) வைக்கும் பழக்கம் இல்லை அல்லது தேவையில்லாமல் பேசும் பழக்கம் இல்லை. அனைவருக்கும் தெரியும்.
சில நேரங்களில், பேசாமல் இருப்பது நல்லது. ஒரு கிரிக்கெட் வீரரின் வேலை மைதானத்தில் சிறப்பாக செயல்படுவதுதான், அதில்தான் நான் கவனம் செலுத்தினேன்." என்று தோனியை நேரடியாகக் குறிப்பிடாமல் இர்ஃபான் பதான் கூறியிருந்தார்.

அந்த வீடியோ திடீரென வைரலாகவே, “அரை தசாப்தத்திற்கு முந்தைய வீடியோ தற்போது அதன் கருத்து திரிக்கப்பட்டு பரவுகிறது. இது ரசிகர் போராக? PR லாபியா?” என நேற்று முன்தினம் (செப்டம்பர் 3) ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் இந்த விவகாரத்தை மேலும் பூதாகாரப்படுத்தியிருக்கிறார்.
இன்சைட் ஸ்போர்ட் ஊடகத்திடம் பேசியிருக்கும் யோகராஜ் சிங், "இது இர்ஃபான் பதான் பற்றியது மட்டுமல்ல. கம்பீர் இதுபற்றி பேசியிருப்பதைப் பார்த்திருக்கிறீர்கள்.
சேவாக் அதை வெளிப்படையாகவே சொன்னார். தான் எப்படி ஈயைப் போல அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.
தோனி ஏன் அப்படிச் செய்தார் என்பது குறித்து ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும்.

அதேசமயம், தோனி பதிலளிக்க விரும்பவில்லை. ஒருவர் பதிலளிக்க விரும்பவில்லை எனில் குற்ற உணர்ச்சி இருக்கிறது.
பிஷன் சிங் பேடி, கபில்தேவ், தோனி ஆகியோரைப் பற்றி நான் பேசுகிறேன். வீரர்களை அவர்கள் முட்டாள்கள் போல நடத்தினார்கள்.
நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன், நம் கிரிக்கெட் வீரர்களும், அணியும் நம் கேப்டனால் அழிக்கப்பட்டன" என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.