செய்திகள் :

IPL-ல் 3 முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்; 25 வருட கரியரை முடித்துக் கொண்ட இந்திய சாம்பியன்!

post image

ஐபிஎல்-லில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரரான அமித் மிஸ்ரா, அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

சுழற்பந்துவீச்சாளரான இவர் 2003-ல் வங்காளதேசம், தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரில் (50 ஓவர்) தென்னாப்பிரிக்காவுக்கெதிரான போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அதற்கு 5 ஆண்டுகள் கழித்து 2008-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும், அடுத்து 2010-ல் ஜிம்பாப்வேவுக்கெதிரான போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.

அமித் மிஸ்ரா (Amit Mishra)
அமித் மிஸ்ரா (Amit Mishra)

மூன்று ஃபார்மெட்டுகளையும் சேர்த்து 68 சர்வதேச போட்டிகள் ஆடியிருக்கும் அமித் மிஸ்ரா, மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணியில் 15 பேர் கொண்ட பட்டியலில் அமித் மிஸ்ராவும் ஒருவர்.

ஐ.பி.எல்லில் 161 போட்டிகளில் 174 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் 8-வது இடத்தில் இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2017-ல் இங்கிலாந்துக்கெதிராகவும், ஐ.பி.எல்லில் கடைசியாக 2024-ல் லக்னோ அணி சார்பில் ராஜஸ்தான் அணிக்கெதிராகவும் ஆடியிருக்கும் அமித் மிஸ்ரா இன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அமித் மிஸ்ரா, "25 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கிறேன்.

கிரிக்கெட்தான் என் முதல் காதல், என் குரு, என் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஆதாரம்.

இந்தப் பயணமானது பெருமை, கற்றல், கடினம், அன்பின் தருணங்கள் என எண்ணற்ற உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது.

பி.சி.சி.ஐ, ஹரியானா கிரிக்கெட் சங்கம், எனது பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்ஸ், சக வீரர்கள் மற்றும் என்னுடைய ஒவ்வொரு அடியிலும் எனக்கு நம்பிக்கையும் ஆதரவும் அளித்த ரசிகர்கள் ஆகியோருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

ஆரம்பக் கால போராட்டங்கள், தியாகங்கள் முதல் மைதானத்தில் மறக்க முடியாத தருணங்கள் வரை, என்னுடைய ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கிரிக்கெட் வீரராகவும் ஒரு நபராகவும் என்னை வடிவமைத்த அனுபவமாக இருந்துள்ளது.

ஏற்றத் தாழ்வுகளின்போது என் பக்கம் நின்ற என் குடும்பத்தினருக்கு நன்றி. இந்தப் பயணத்தை சிறப்பானதாக மாற்றிய அணியினருக்கும், வழிகாட்டிகளுக்கும் நன்றி.

என்னுடைய இந்த அத்தியாயத்தை முடிக்கும்போது என் இதயம் முழுவதும் அன்பால் நிறைந்துள்ளது.

கிரிக்கெட் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. இப்போது, என்னை உருவாக்கிய கிரிக்கெட்டுக்கு திருப்பித் தர ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

அமித் மிஸ்ரா என்றதும் உங்களுக்கு நினைவுக்கு வரும் போட்டி எதுவென்பதை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.

"நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்..." - இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்

இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்.கடை... மேலும் பார்க்க

"பேட் கம்மின்ஸ் அப்படி செய்வாரா?" - பும்ரா மீதான பணிச்சுமை விவாதத்தில் இந்திய முன்னாள் வீரர் கேள்வி

கிரிக்கெட் உலகில் தற்போது நம்பர் ஒன் பவுலராக விளங்குபவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா.தனது தனித்துவமான பவுலிங் ஸ்டைலால் பேட்ஸ்மேன்களைத் திணறடிக்கும் பும்ராவுக்கு, அந்த பவுலிங் ஸ்டைலே ஆபத்... மேலும் பார்க்க

RCB stampede: "மிகவும் சந்தோஷமான தருணம் துக்கமானதாக மாறிவிட்டது" - கோலி உருக்கம்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஒரு வழியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கடந்த சீசனில் கோப்பையை வென்றது.ஆன... மேலும் பார்க்க

Mitchell Starc: ``இதுவே சிறந்த வழி'' - சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த மிட்செல் ஸ்டார்க்

மிட்செல் ஸ்டார்க்சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் மிட்செல் ஸ்டார்க்.ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மிட்செல் ஸ்டார்க் இதுவரை 65 T20 போட்டிகளில் வி... மேலும் பார்க்க

"லலித் மோடியின் சுயநலம்..." - ஸ்ரீசாந்த்தை அறைந்த வீடியோ வெளியானது குறித்து ஹர்பஜன்

இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த 2008-ல், மும்பை vs பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல் போட்டியில் ஸ்ரீசாந்த்தை கன்னத்தில் அறைந்த செயல் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த சம்பவத்துக்குப... மேலும் பார்க்க

Rahul Dravid: RR பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து திடீர் விலகல்; IPL-ல் ராகுல் டிராவிட் பாதை

இந்திய பிரீமியர் லீக்கில் (IPL)-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் விவாதமாக மாற... மேலும் பார்க்க