செய்திகள் :

பெரியார் உலகமயமாகிறார்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

post image

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப் படத்தை திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெரியார் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது:

”பல நூறு ஆண்டுகளாக உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் இந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கத்தில் பேசுவதை நான் பெருமையாக கருதுகிறேன்.

இங்கே நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் தெற்காசிய அரசியலைப் புரட்டிப் போட்ட இயக்கமான திமுகவின் தலைவராக மட்டுமல்ல பெரியாருடைய பேரன் என்கிற கம்பீரத்தோடு வந்துள்ளேன்.

பகுத்தறிவு பகலவன் அறிவாசான் தந்தை பெரியாரின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில திறந்து வைப்பதை எனது வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.

பகுத்தறிவு உலகம் முழுவதும் பரவி வருவது என்பதன் அடையாளம்தான் இந்த படத்திறப்பு நிகழ்ச்சி. பெரியார் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறார் என்பதன் அடையாளம் அவருடைய படத்திறப்பு விழா.

பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்தோடு இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள்ளனர்.

தந்தை பெரியாரின் கொள்கை வாரிசுன்னு நான் தொடர்ந்து கூறி வருகிறேன். பெரியாரை உலகம் கொண்டாடுவது தமிழ்நாட்டுக்கும் திராவிட இயக்கத்திற்கும் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பெருமை.

தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த சொல் சுயமரியாதை. உலகத்துல எந்த அகராதியிலும் இதைவிட சிறந்த சொல் இல்லை என்பார். உலகத்திலேயே உயிரை கொடுத்து பெற வேண்டிய ஒன்று சுயமரியாதைதான் என அழுத்தமாக கூறினார்.

சமூகநீதி கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவுக்கான கொள்கையாக அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற வைத்தவர் தந்தை பெரியார். தமிழ்நாடு என்ற பெயரை வைக்க பெரியார் போராடினார், ஆட்சி அதிகாரத்தை அடைந்து அண்ணா அதனை செய்து காட்டினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களுக்கு சொத்துகளில் சம உரிமை உள்ளிட்டவற்றை சட்டமாக்கினார் கலைஞர்.

பெரியார் உலகமயமாகிறார். உலகம் மானுட தந்தையை மதிப்பதாக மாறட்டும்.” எனத் தெரிவித்தார்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin delivered speech at the unveiling of Father Periyar's portrait at Oxford University.

இதையும் படிக்க : ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி..! ஓபிஎஸ்

அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே மீண்டும் வெற்றி பெற முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச... மேலும் பார்க்க

இபிஎஸ், ஓபிஎஸ் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய செங்கோட்டையன்!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செய்தியாளர்கள் சந்திப்பில் இபிஎஸ், ஓபிஎஸ் பெயரையே குறிப்பிடாமல் பேசினார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்திய... மேலும் பார்க்க

பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும்: செங்கோட்டையன் காலக்கெடு!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் காலக்கெடு விதிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் உருவப்படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு ப... மேலும் பார்க்க

நிலக்கரி அமைச்சகத்தின் 5 நட்சத்திர மதிப்பீடு: முதல் பரிசை வென்ற என்எல்சி

சா்வதேச தரத்துக்கு நிகராக தேசிய அளவில் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி வருவதற்காக நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு (என்எல்சி) 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் முதல் பரிசு வழங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ... மேலும் பார்க்க

தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தனியாா் மருந்து நிறுவனத்தின் 15 லட்சம் பங்குகளை அமலாக்கத் துறை முடக்கியது. சென்னையில் இயங்கும் ஒரு தனியாா் மருந்து நிறுவனம் மீது பதியப்பட்ட சட்டவிரோத பணப்பரிம... மேலும் பார்க்க