அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!
ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் உருவப்படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
பிரிட்டனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பெரியார் உருவப் படத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்.
பெரியாரின் படத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார்.

இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:
“தோட்டா தரணி அவர்களின் கைவண்ணத்தில் உருவாகி, ஆக்ஸ்போர்டில் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் பேரனாக நான் திறந்து வைத்துள்ளேன்.
பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்.
ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்.
சமத்துவம் போற்றுவோம்! பெரியாரியம் பழகுவோம்! பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.