செய்திகள் :

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவு

post image

திபெத்: சீனாவின் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் திபெத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருள்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியிலுள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது.

1,862 கோடி டாலராக உயா்ந்த அந்நிய நேரடி முதலீடு

An earthquake of magnitude 3.8 struck Tibet in the early hours of Friday, as reported by the National Centre for Seismology.

தொண்டர்களின் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் செங்கோட்டையன்: வைத்தியலிங்கம் கருத்து

தஞ்சாவூர்: அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், அத... மேலும் பார்க்க

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இங்கே நிலவுகின்ற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களைய வேண்டும் என லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப் படம் திறப்பு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது ப... மேலும் பார்க்க

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஆசிரியர் நாளையொட்டி, ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்! பிள்ளைகள்... மேலும் பார்க்க

புதிய உச்சத்தை பதிவு செய்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை பவுன் ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது. அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலரு... மேலும் பார்க்க

என்ன சொல்லப்போகிறார் செங்கோட்டையன்?

அதிமுக உட்கட்சி பிரச்னை தொடா்பாக வரும் 5 ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் என சொல்லப்போகிறார் என்பதை கேட்பதற்காக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடியுள்ளதா... மேலும் பார்க்க