செய்திகள் :

ஓய்விலிருந்து மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் பிரபல நியூசி. வீரர்!

post image

ஓய்வு முடிவிலிருந்து வெளிவந்து பிரபல நியூசிலாந்து வீரர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார்.

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். நியூசிலாந்து அணிக்காக அவர் 112 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 7683 ரன்களுடன் கேன் வில்லியம்சனுக்கு அடுத்தபடியாக ராஸ் டெய்லர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த நிலையில், அடுத்த மாதம் ஓமனில் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதற்காக நடத்தப்படும் தொடரில் சமோயா அணிக்காக ராஸ் டெய்லர் விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

41 வயதாகும் ராஸ் டெய்லர் சமோயா அணிக்காக உலகக் கோப்பைக்குத் தகுதி பெறுவதற்கான தொடரில் விளையாடவுள்ளார். டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெறுவதற்கான போட்டியில் பப்புவா நியூ கினியாவை எதிர்த்து சமோயா விளையாடவுள்ளது.

மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளது குறித்து ராஸ் டெய்லர் பேசியதாவது: ஓய்வு முடிவிலிருந்து வெளிவந்து தங்களது அணிக்கு உதவுமாறு வீரர்கள் கேட்பது சக்திவாய்ந்த விஷயமாக உள்ளது. நான் மிகவும் சிறப்பான உடல்தகுதியுடன் இருக்கிறேன் எனக் கூறமாட்டேன். ஆனால், எல்லைக்கோட்டில் வேகமாக ஓடி பவுண்டரிகளை தடுக்கும் அளவுக்கு நான் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன் என்றார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The famous New Zealand player is set to return to cricket after coming out of retirement.

இதையும் படிக்க: ஆஸி. மகளிரணி அறிவிப்பு: 8-ஆவது உலகக் கோப்பையை வெல்லுமா?

தொடர் தோல்விகளால் திணறும் இங்கிலாந்து! 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல்!

இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளால் 2027 உலகக் கோப்பைக்கு தகுதிபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்றுப் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியி... மேலும் பார்க்க

ஆஸி. மகளிரணி அறிவிப்பு: 8-ஆவது உலகக் கோப்பையை வெல்லுமா?

மகளிர் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற இருக்கும் ஒருநாள் மகளிர் உலகக் கோப்பைக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.ஒருநாள் மகளிர் உ... மேலும் பார்க்க

5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை வென்றது தெ.ஆ.!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தெ.ஆ. அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை வென்றுள்ள... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவ... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில்... மேலும் பார்க்க

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இங்கிலாந்து அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள... மேலும் பார்க்க