45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!
``அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல்; அதனால்தான்'' - செல்வப்பெருந்தகை சொல்வதென்ன?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று (செப்டம்பர் 5) மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்திருந்தார்.
அதேபோல், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய செங்கோட்டையன், “கட்சியில் இருந்து வெளியேறிவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால்தான் அதிமுக வெற்றி பெற முடியும்.

அதிமுக ஒருங்கிணைந்தால்தான் நான் முழுமையாக இறங்கி வெற்றிக்காகப் பணியாற்றுவேன். இது நடந்தால்தான் சுற்றுப்பயணம், தேர்தல் பணிகளில் இறங்கி பணியாற்றுவேன்,” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையிடம் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து அவர், “அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துவிட்டனர். அது மூழ்கும் கப்பல்.
அந்தக் கப்பலில் ஏறினால் மூழ்கி விடுவோம் என்று ஒவ்வொரு காரணத்தையும் சொல்லி வெளியேறி வருகிறார்கள். அதிமுக-பாஜக கூட்டணியை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்,” என்று கூறியிருக்கிறார்.