BJP: ``இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு இடமில்லை'' - பாஜக நிர்வாகி அலிஷா அப்துல்லா வருத்தம்
சமீபத்தில் தமிழக பாஜக கட்சியில் பொறுப்புகள் மாற்றம் செய்யப்பட்டு, 25 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இப்பட்டியலை வெளியிட்டிருந்தார்.
அதில், நடிகை குஷ்பூ உள்ளிட்ட 14 பேர் மாநிலத் துணைத் தலைவர்களாகவும், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 15 பேர் மாநிலச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நயினார் நாகேந்திரனின் மகன் ஶ்ரீ நயினார் பாலாஜிக்கும் நெல்லை வடக்கில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க.வில் இணைந்த விஜயதரணிக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை.
அதேபோல, பா.ஜ.க. நிர்வாகி அலிஷா அப்துல்லாவிற்கும் எந்தவொரு பொறுப்பும் வழங்கப்படவில்லை என்பது பா.ஜ.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள பா.ஜ.க. நிர்வாகி அலிஷா அப்துல்லா,
"சாதி, மத வேறுபாடு கூடாது என்ற பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையின் நோக்கத்துக்காகவே நான் பா.ஜ.க.வில் இணைந்தேன். ஆனால் இப்போது அது அப்படியில்லை. ஒரு இந்திய வீராங்கனையாக, இன்று வெளியான அறிவிப்புகள் எனக்கு அதிர்ச்சியளிக்கின்றன."

"என் 3 வருட உழைப்பு குப்பையில் வீசப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகி கேசவ வினாயகத்திடம் என் உழைப்பை முன்வைத்த போது, அவர் அதை உதாசீனம் செய்தார். இஸ்லாமியர்களுக்கு இங்கே இடமில்லை. 25 அணிகளுக்கான அமைப்பாளர்களில் ஒரு கிறிஸ்தவரும், இஸ்லாமியரும் கூட இல்லை," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அலிஷா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs