செய்திகள் :

புதிய உச்சத்தை பதிவு செய்தது தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை பவுன் ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது.

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு எதிரொலி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சா்வதேச சந்தையில் முதலீட்டாளா்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆா்வம் காட்டிவருகின்றனா். இதனால், உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

கடந்த ஆக. 29-ஆம் தேதி முதலே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வரலாறு காணாத புதிய உச்சங்களை தொட்டு வருகிறது.

கடந்த 9 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,000 உயா்ந்து, புதன்கிழமை பவுன் ரூ.78,440-க்கு விற்பனையான நிலையில், வியாழக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.9,795-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.78,360-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.9,865-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.78,920-க்கு விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலை தொடா்ந்து 3-ஆவது நாளாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ.137-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1.37 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

கடந்த 10 நாள்களுக்கான தங்கம் விலை விவரம்:

ஆகஸ்ட் 26 ரூ.74,840 (+ரூ.400)

ஆகஸ்ட் 27 ரூ.75,120 (+ரூ.280)

ஆகஸ்ட் 28 ரூ.75,240 (+ரூ.120)

ஆகஸ்ட் 29 ரூ.76,280 (+ரூ.1,040)

ஆகஸ்ட் 30 ரூ.76,960 (+ரூ.680)

செப்டம்பர் 1 ரூ.77,640 (+ரூ.680)

செப்டம்பர் 2 ரூ.77,800 (+ரூ.160).

செப்டம்பர் 3 ரூ.78,440 (+ரூ.640).

செப்டம்பர் 4 ரூ.78,360 (-ரூ.80)

செப்டம்பர் 5 ரூ.78,920 (-ரூ.560)

தமிழகத்தில் புதிய நோய் பாதிப்புகள் ஏதுமில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

The price of gold jewelry in Chennai has risen again and recorded a new high.

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். இங்கே நிலவுகின்ற அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களைய வேண்டும் என லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப் படம் திறப்பு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை!

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் இயக்கவும் வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது ப... மேலும் பார்க்க

ஆசிரியர் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஆசிரியர் நாளையொட்டி, ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்! பிள்ளைகள்... மேலும் பார்க்க

என்ன சொல்லப்போகிறார் செங்கோட்டையன்?

அதிமுக உட்கட்சி பிரச்னை தொடா்பாக வரும் 5 ஆம் தேதி மனம் திறந்து பேசுவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் என சொல்லப்போகிறார் என்பதை கேட்பதற்காக அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் கூடியுள்ளதா... மேலும் பார்க்க

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவு

திபெத்: சீனாவின் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் நான்காவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை 120 அடியாக நீடிக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 23,300 கன அடியாக நீடி... மேலும் பார்க்க