செய்திகள் :

Red Moon: `ரத்த நிலவு' இந்தியா உள்பட பல நாடுகளில் இன்று சந்திர கிரகணம்!

post image

சந்திர கிரகணம்:

இன்று இரவு இந்தியா உள்பட உலகின் பல நாடுகளிலிருந்து முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் இந்த கிரகணத்தின் போது நிலவு செந்நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் இந்திய வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திர கிரகணத்தை 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படுகிறது.

பூமியின் நிழலில் சந்திரன் கடந்து செல்லும் போது, நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்படுவதால் இது ஏற்படுகிறது.

ரத்த நிலவு
ரத்த நிலவு

சூரியனிலிருந்து பூமிக்கு எதிர் பக்கத்தில் நிலவு வரும்போது முழு நிலவு அல்லது பெளர்ணமி ஏற்படுகிறது. அப்போது நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழு பக்கமும் ஒளிரும்.

கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு:

இன்றிரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் சந்திர கிரகணத்தைக் கண்டு ரசிக்க ராட்சத தொலை நோக்கிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிகழ்வினை, விளக்க உரையுடன் ஆராய்ச்சியாளர்கள் முழு சந்திர கிரகணத்தைப் பற்றி எடுத்துரைக்க உள்ளனர். பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின்போது விமானத்தில் செல்பவர்களும் இதனைக் காண முடியும் என்றும், கிரகணத்தைப் பார்ப்பதால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையல்ல என்றும் வான் இயற்பியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

தெருநாய் விவகாரம்: ``நாய்களுக்காக மனிதர்களை வெறுப்பது நல்ல மனோபாவம் அல்ல” - எஸ்.வி. சேகர்

சமீபத்தில் தெருநாய் விவகாரம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விஷயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலைபாடு ஒன்றாகவே உள்ளது.இதற்கிடையில், “தெருநாய்களுக... மேலும் பார்க்க

தெருநாய் விவகாரம்: ``இது அம்முவுக்காக அல்ல, பொதுவாகச் சொல்கிறேன்'' - நடிகர் ராதாரவி

இந்தியாவில் தெருநாய்கள் அதிகரித்து வருவது, தெருநாய் கடி காரணமாக உயிரிழப்புகள் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தெருநாய்களுக்கு ஆதரவானவர்களும், அவற்றை எதிர்க்கும் தரப்பினரும் தங்கள... மேலும் பார்க்க

Gaza: 23 நிமிடங்கள் கைதட்டல் வாங்கிய காசா படம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.தொடர்ந்த தாக்குதல்களால் காசா மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க

Dolce Vento: புறப்பட்ட சில நிமிடங்களில் மூழ்கிய சொகுசுக் கப்பல் - வைரலாகும் வீடியோ! - என்ன நடந்தது?

சொகுசு கப்பல்:துருக்கியில் ரூ.7 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட சொகுசு கப்பல் கடலில் இறக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளேயே மூழ்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. கடந்த 2-ம் தேதி துருக்கியின் ... மேலும் பார்க்க

துபாயில் ரூ.35 கோடி லாட்டரி வென்ற இந்திய தொழிலாளி - என்ன செய்யப் போகிறார் தெரியுமா?

துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர், 1 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் லாட்டரியில் வெற்றி பெற்றுள்ளார்.கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி அபுதாபி பிக் டிக்கெட் சீரிஸ் 278 டிரா நடைபெற்றது. இதில் சந்தீப... மேலும் பார்க்க

Fahadh Faasil: நடிகர் பஹத் பாசில் வாங்கியிருக்கும் `Ferrari Purosangue' - மதிப்பு என்ன தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருப்பது போல சிலருக்கு கார் கலெக்‌ஷன் பழக்கம் இருக்கும். இந்தியாவில் கார் கலெக்‌ஷன் செய்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் மலையாள நடிகர் ஃபஹத் பாசிலை தவிர்க்கவே முடியா... மேலும் பார்க்க