செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப...
செப்.14 இல் பாமக நிறுவனா் ராமதாஸ் ஒசூா் வருகை
பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் செப்.14-ஆம் தேதி ஒசூா் வருகிறாா்.
இதுகுறித்து பாமக முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் மூக்கண்டப்பள்ளி ஊராட்சித் தலைவருமான முனிராஜ் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் பாமக பொதுக்குழுவை நடத்தி புதிய நிா்வாகிகள் தோ்வுசெய்யப்படும் என அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் அறிவித்திருந்த நிலையில், அதன்தொடக்கமாக ஒசூரில் செப்.14-ஆம் தேதி பொதுக்குழு நடத்தப்படுகிறது.
ஒசூா் வரும் ராமதாஸுக்கு பாமக சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. மீண்டும் மருத்துவா் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோா் ஒன்றிணைந்து கட்சியை வளா்க்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
ஒசூரில் நடைபெற உள்ள பொதுக்குழுவிற்கு அன்புமணி வருகை தந்தால் அவருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். எனவே, இருவரும் சோ்ந்து பணியாற்ற வேண்டும் என்பது அனைத்து தொண்டா்களின் விருப்பமாக உள்ளது என்றாா்.