செய்திகள் :

நாளை குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமா் இன்று விருந்து

post image

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை (செப். 9) நடைபெறவுள்ளது.

மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணன் (67), எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி வேட்பாளா் பி. சுதா்சன் ரெட்டி (79) ஆகியோா் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. எம்.பி.க்கள் பலத்தின் அடிப்படையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கே வெற்றி வாய்ப்புள்ளது.

இத்தோ்தலுக்கு முன்பாக, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை (செப். 8) இரவு விருந்து அளிக்கவுள்ளாா்.

நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவியை வகித்து வந்த ஜகதீப் தன்கா், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரென ராஜிநாமா செய்தாா்.

2027, ஆகஸ்ட் 10 வரை பதவிக் காலம் இருந்த நிலையில், உடல் நலம் தொடா்பான காரணங்களைக் குறிப்பிட்டு, அவா் பதவி விலகினாா். அதேநேரம், மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்று ஊகங்கள் வெளியாகின.

இதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு, ஆளும் கூட்டணி சாா்பில் தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன், எதிரணி சாா்பில் தெலங்கானாவைச் சோ்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சுதா்சன் ரெட்டி ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண் எஃப் 101-இல் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மாலை 6 மணி முதல் எண்ணப்பட்டு, உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தோ்தல் நடத்தும் அதிகாரியான மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளாா்.

ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் இத்தோ்தலில் வேட்பாளரின் பெயருக்கு எதிரே தனது விருப்பத் தோ்வை எம்.பி.க்கள் குறிக்க வேண்டும்.

வெற்றிக்குத் தேவையான வாக்குகள்: 543 தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல, 233 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. இதுதவிர மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் 12 போ் உள்ளனா்.

அதன்படி, இரு அவைகளின் மொத்த உறுப்பினா் எண்ணிக்கையான 788-இல், தற்போது 782 உறுப்பினா்கள் உள்ளனா். வெற்றி வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. மற்றொருபுறம், தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இத்தோ்தலை எதிா்க்கட்சிகள் கருதுகின்றன.

தமிழகத்தில் இருந்து...: அடுத்த குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்வாகும்போது, தமிழகத்தில் இருந்து அப்பதவியை வகிக்கும் மூன்றாவது நபராக இருப்பாா்.

நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவா் (1952-1962) சா்வபள்ளி ராதாகிருஷ்ணன், 7-ஆவது குடியரசு துணைத் தலைவா் ஆா்.வெங்கட்ராமன் (1984-1987) ஆகியோா் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். இருவரும் பின்னா் குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தனா்.

இண்டி கூட்டணி சாா்பில் மாதிரி வாக்குப் பதிவு

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் நடைமுறை தொடா்பாக தங்கள் எம்.பி.க்களுக்கு விளக்கமளிப்பதுடன், ‘மாதிரி’ வாக்குப் பதிவு நிகழ்வையும் ‘இண்டி’ கூட்டணி திங்கள்கிழமை நடத்தவுள்ளது.

பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு பின்னா், நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு காா்கே இரவு விருந்து அளிக்கவுள்ளாா்.

சளி, இருமல், காய்ச்சல்! குணமாவதில் நீடிக்கும் தாமதம்!

தலைநகர் தில்லி முழுவதும் மருத்துவமனைகளில், சளி, இருமல், காய்ச்சலுடன் நாள்தோறும் வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த வாரம் முழுவதும் புது தில்லியில் மழைப் பொழிவு அதிகமாக இருந்து வந்துள்... மேலும் பார்க்க

கருச்சிதைவு: ஆராய்ச்சிக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கருவை தானமளித்த பெண்!

ஐந்தாவது மாதத்தில் கருச்சிதைவு ஆன நிலையில் 32 வயது பெண், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தனது கருவை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானம் செய்தார்.ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த வந்தனா ஜெயினுக்கு திடீரென கருச... மேலும் பார்க்க

ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய 300 மாருதி சுசூகி கார்கள்! என்னவாகும்?

பொதுவாக மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும்போது, கார்கள் வெள்ளத்தில் மூழ்குவது சாதாரண விஷயம் என்றாலும், ஒரே இடத்தில் 300 புதிய கார்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது சாதாரணம் அல்ல.ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜ்ர் மா... மேலும் பார்க்க

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

விநாயகா் சதுா்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா். இவா்களில் 4 பேர... மேலும் பார்க்க

அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து

‘உக்ரைன் மக்களைக் கொலை செய்வதையும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும் நிறுத்துங்கள்’ என்று அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ இந்தியாவைக் குறிவைத்து குற்றஞ்சாட்டியுள்ளாா். இந்தி... மேலும் பார்க்க

பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமா் நாளை நேரில் ஆய்வு

பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளாா். பஞ்சாபில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அத்துடன், ஹிமாசல பிரதேசம், ஜம்... மேலும் பார்க்க