``நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா எனது கருத்தை ஆதரித்துள்ளனர்” - சஸ்பென்ஸ் சொன்ன ...
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெளிநாடு பயணம் மாபெரும் வெற்றி பயணமாக அமைந்துள்ளது. மிக அதிக அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
ஜெர்மனி, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை சென்னை திரும்பினார். சென்னை வந்திறங்கிய அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தில் ரூ.15,516 கோடி மதிப்பில் தொழில் முதலீட்டிற்கான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.
சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதலில் ஜெர்மனி சென்ற அவர் பின்னர் அங்கிருந்து இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
மேலும் முதல்வருடன் தொழில், வர்த்தகம், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா மற்றும் அதிகாரிகள் குழுவினரும் உடன் சென்றனர்.