``ரஷ்யா மீது இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எடுக்க தயார்'' - ட்ரம்ப் மீண்டும் தடாலடி
போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்
போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.
தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் 21 மாணவர்கள் விடுமுறைக்காக கேரள மாநிலம் மூணாறுக்கு சென்றனர். மூன்று நாள் விடுமுறையை கழித்த மாணவர்கள் சுற்றுலா வேன் மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு தஞ்சாவூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

போடிமெட்டு மலைச்சாலை வழியாக சுற்றுலா வேன் திங்கள்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்தது. வேனில் 21 மாணவர்கள் இரண்டு ஒருங்கிணைப்பாளர்கள், ஓட்டுநர் என மொத்தம் 24 பேர் இருந்தனர். போடிமெட்டு மலைச்சாலையில் 3 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே பிரேக் பிடிக்காமல் சாலை வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் 11 பேர் பலத்த காயமடைந்தனர். தகவல் கிடைத்து குரங்கணி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.