``ரஷ்யா மீது இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் எடுக்க தயார்'' - ட்ரம்ப் மீண்டும் தடாலடி
``அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம்; ஆனால்'' - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், நிலகோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி தொகுதிகளில் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்தார் மக்களிடையே பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,
"மற்ற மாவட்டங்களில் கூறிய வாக்குறுதிகளைப் போல, திண்டுக்கலிலும் பல பொய் பிரச்சாரம் செய்து, பொய் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது திமுக ஆட்சி.
மக்களின் நலன் கருதி, திண்டுக்கலில் 350 கோடி ரூபாய் செலவில் அரசு மருத்துவமனையை கட்டியது நம் அதிமுக அரசு. ஆனால் இன்று ஸ்டிக்கர் ஒட்டி, பெயர்களை வைத்து அவர்கள் கட்டியது போல் திறந்து வைக்கிறது திமுக

இந்த பகுதியை சார்ந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இருக்கிறாரா? இல்லையா? என்பது கூட தெரியவில்லை. மக்களுக்கு சேரவேண்டிய அடிப்படை வசதிகளும், ஊராட்சிகளுக்கு சேரவேண்டிய நிதிகளும், தனது கட்சியையும் செல்வாக்கையும் வளர்த்துக்கொள்வேற்காகவே பயன்படுத்திக் கொள்கிறார்.
`அதிமுக ஆட்சியில்'
நமது ஆட்சியில்தான் நிலக்கோட்டை தொகுதியில் முதன்முறையாக அரசு மகளிர் கலைக் கல்லூரி கொண்டு வரப்பட்டது. குடிநீர் தேவைகளுக்காக காவேரி கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம், மஞ்சலாறு மற்றும் மறுகநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது; வத்தலகுண்டு பெரிய கண்மாய் தூர்வாரப்பட்டு விவசாயத்திற்கு வழிவகை செய்தது.
இந்த ஐந்து ஆண்டுகளில் திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மட்டும் தொண்ணூறு ஆயிரம் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்கள், ஆனால் அதில் வெறும் நாற்பது ஆயிரம் குடும்பங்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

`எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது'
அதிமுகவை எவ்வளவோ பேர் உடைக்கப்பார்க்கிறார்கள். முடக்கப் பார்க்கிறார்கள். அத்தனையையும் உங்கள் துணையோடு தவிடுபொடியாக்கி வருகிறோம்.
இது தொண்டர்கள் மிகுந்த கட்சி, உயிரோட்டமுள்ள கட்சி; எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது.
அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் கூட எம்பி ஆகலாம், எம்எல்ஏ ஆகலாம், ஏன் என்றால் முதலமைச்சர் கூட ஆகலாம். அதிமுகவின் பொதுச்செயலாளராக கூட ஆக முடியும்.
ஆனால் திமுகவில் பதவிக்கு வர வேண்டுமென்றால் அவர்களுடைய குடும்பத்தில் பிறக்க வேண்டும். கொள்ளையடிப்பதில் முதன்மை கட்சியாக திமுக உள்ளது. கண்ணுக்கு தெரியாத காற்றை வைத்தே 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தவர்கள் திமுகவினர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் என தமிழக மக்கள் எல்லோருமே போராடி வருகின்றனர்," என்றார்.