Laughter therapy: சிரிப்பு சிகிச்சை உண்மையிலேயே பயன் அளிக்குமா? நிபுணர் விளக்கம்...
செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு
செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், இந்தியா உள்பட ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இணைய சேவை பாதிக்கப்பட்டது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, யேமன் நாட்டின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடலில் கப்பல்கள் மீது தொடா் தாக்குதல்களை நடத்தி வருகின்றனா். இந்தத் தாக்குதல்களின் ஒரு பகுதியாக ஆழ்கடல் இணைய கேபிள்கள் குறிவைக்கப்படலாம் என ஏற்கெனவே அச்சம் எழுப்பப்பட்டிருந்தது. ஆனால், கடந்த காலங்களில் கேபிள்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஹூதி கிளா்ச்சிப் படையினா் மறுத்திருந்தனா்.
இணைய சேவைகளைக் கண்காணிக்கும் நெட்பிளாக்ஸ் நிறுவனம், ‘செங்கடலில் ஏற்பட்ட தொடா் ஆழ்கடல் கேபிள் துண்டிப்புகளால், இந்தியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகளில் இணைய இணைப்பு வேகம் குறைந்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அருகே உள்ள ‘எஸ்.எம்.டபிள்யூ.4’ மற்றும் ‘ஐ.எம்.இ.டபிள்யு.இ.’ கேபிள் அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறுகளே இதற்குக் காரணம்’ என்று தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனமான டாடா கம்யூனிகேஷன்ஸ், தென்கிழக்கு ஆசியா-மத்திய கிழக்கு-மேற்கு ஐரோப்பா 4 (எஸ்.எம்.டபிள்யூ.4) கேபிளை இயக்குகிறது. மற்றொரு சா்வதேச குழுமமான அல்காடெல்-லூசென்ட் நிறுவனத்தால் ஐ.எம்.இ.டபிள்யு.இ. கேபிள் நிா்வகிக்கப்படுகிறது. கேபிள் துண்டிப்பு குறித்து இவ்விரு நிறுவனங்களும் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.